முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி - கலாநிதி மாறனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

சென்னை,ஆக.7 – தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவன அதிபரை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்கு களை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக, ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை மிரட்டி, அந்நிறுவனத்தின் பங்குகளை, மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யவைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு கைமாறாக, மேக்சிஸ் நிறுவனம், சன் டி.வி. குழுமத்திற்கு சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., தயாநிதிமாறனுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை அறிவதற்கு சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில், தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போதிய ஆதாரம் உள்ளது என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஸ்தோகி, அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார். மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்துக்களை தீவிரமாக சி.பி.ஐ. பரிசீலித்து வந்தது.

இதனைத்தொடர்ந்து, தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதிமாறன் ஆகியோருக்கு எதிராக இன்னும் ஒருவாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago