முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாளு - கனிமொழி - ராசா ஜாமீன் மனு: ஆக-20-ல் உத்தரவு

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.08 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக அலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், திமுக தலைவர் கருணநிதியின் மனைவி தயாளு அம்மாள், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்பட 10 பேரின் ஜாமீன் மனுக்கள் மீது வரும் 20-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ கோர்ட் தெரிவித்தது.

இந்த மனுக்கல் மீதான விசாரணை கடந்த மாதம் 22-ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து, இதற்கான உத்தரவு அளிக்கப்படும் என்று சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் ஜாமீன் கோரியவர்கள் மனுக்கள் தொடர்பாக சிறப்பு நீதிபதி சைனி கூறியதாவது:

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கையும், அலாக்கத் துறை தொடர்ந்த வழக்கையும் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஜாமீன் கோரிய மனுக்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பான இரு தரப்பு வாதங்களை விரிவாகப் படித்து ஆராய்ந்த பின்பே உத்தரவு வழங்க முடியும். எனவே அந்த மனுக்கள் மீதான உத்தரவை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன் என்றார்.

இதற்கிடையே அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், அLன் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தயாளு அம்மாள், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தயாளு அம்மாள் தனியாக சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவுக்கு சிபிஐ ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அதன் மீதான தனது உத்தரவையும் சிற்பபு நீதிபதி சைனி ஒத்திவைத்துள்ளார்.

எமவே, ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் ஆகஸ்ட் 20-ஆம் தேதியன்று தயாளு அம்மாளின் மனு மீதும் சிபிஐ நீதிமன்றம் உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்