தமிழக ஹாக்கி வீரர்கள் இருவருக்கு தலா ரூ.30 லட்சம்

வியாழக்கிழமை, 7 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஆக.8 - சமீபத்தில் நடந்த காமன்வெல் போட்டிகளில் ஹாக்கிப்பிரிவில் இந்தியா வெள்ளி பதக்கத்தை வென்றது. இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் இருவருக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்கள் சுரேஷ், பரட்டு ரவீந்திரன் மற்றும் ருபீந்தர்சிங் ஆகிய இருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ருபீந்தர்சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:_
ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் சமீபத்தில் நடந்த காமன்வெல் போட்டிகளில் ஹாக்கி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்த தாங்கள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். தங்களின் சிறப்பான இந்த சாதனைக்கு என்னுடைய சார்பாகவும், தமிழக மக்களின் சார்பாகவும் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஏற்கனவே 2011 டிசம்பரில் காமன்வெல் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு 30 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். இப்போது தாங்கள் இந்த சாதனையை புரிந்ததன் மூலம் அதற்குரிய தகுதியை படைத்திருக்கிறீர்கள். தமிழகத்தின் சார்பாக ரூ.30 லட்சம் பரிசு தொகையை பெறுகிறீர்கள். இந்த மிகப்பெரும் சாதனையை படைத்த தங்களுக்கும், இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எதிர்காலத்தில் மேலும், மேலும் பலவெற்றிகளை தாங்கள் பெற்று நாட்டிற்கும், தமிழத்திற்கும் பெருமை சேர்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.
இதேபோல ரவீந்தரனுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதாவது:_

இதை ஷேர் செய்திடுங்கள்: