முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் பேட்டிங் சொதப்பல்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable


மான்செஸ்டர், ஆக.11 - மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 215 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி 161 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.
இரண்டரை நாட்களில் டெஸ்ட் முடிந்துள்ளது. ஏனெனில் 2ஆம் நாள் ஆட்டம் உணவு இடைவேளைக்குப் பிறகு நடைபெறவில்லை. நேற்றும் இன்னும் 18 ஓவர்கள் மீதமிருந்தன. இதன் மூலம் இங்கிலாந்து தொடரில் 2-1 என்று முன்னிலை வகித்தது. நேற்று அதிகம் விக்கெட்டுகளை விடாமல் இருந்திருந்தால் இன்று இங்கிலாந்தில் புயல், மழை எச்சரிக்கை நிலவுகிறது.
புயலை விடவும் அவசரகதியில் இந்திய பேட்ஸ்மென்கள் விக்கெட்டுகள் சரிந்தன. செய்த தவறையே திரும்பத் திரும்பச் செய்தனர். இத்தனைக்கும் ஸ்டூவர்ட் பிராட், ஆரோன் பவுன்சரில் மூக்குடைபட்டு பந்து வீச வரவில்லை. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 9 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா, புவனேஷ் குமார் ரன் அவுட், கம்பீர், தோனி ஆகியோரது ஷாட்கள் பயங்கரம். நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு லீக் கிரிக்கெட்டை விட மோசமாக இருந்தது இந்திய பேட்டிங். முரளி விஜய், கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்.பி. ஆனார். உள்ளே வரும் பந்துக்கு ஒரு சரியான உத்தி அவரிடம் எப்போதும் இல்லை என்பது தெரிந்தது.
கம்பீரும், புஜாராவும் தட்டுத்தடுமாறி இன்னிங்ஸ் ஸ்கோரை 53/1 என்று உயர்த்தினர். கம்பீர் தடுமாற்றத்துடன் ஆடியதால் அவரது இருப்பு எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போகலாம் என்றே தெரிந்தது. இந்த நிலையில் ஆண்டர்சன் ஒரு பவுன்சரை வீச அதனை சுலபமாக ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் கம்பீர் அதை ஆட முயல பந்து கிளவ்வில் பட்டு அவுர் ஆனார். அடுத்த ஓவர் முதல் பந்தில் புஜாரா, மொயீன் அலி பந்தில் எல்.பி. ஆனார். ரீப்ளே பந்து ஸ்டம்பில் படாது என்று காண்பித்தாலும் அவராலும் எத்தனை நேரம் தோல்வியிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். ஆகவே நடுவரைக் குறைகூறிப் பயன் இல்லை. அஜிங்கிய ரஹானே மிகவும் மோசமான தளர்வான ஷாட் ஒன்றை ஆடி மொயீன் அலி பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
விராட் கோலி, ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஏதோ கடன் பட்டிருப்பார் போல் தெரிகிறது. மீண்டும் அவரிடமே அவுட். ஒரு மாற்றத்திற்காக ஆண்டர்சன் வீசிய இன்ஸ்விங்கரை எட்ஜ் செய்தார். 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆனது 7 ரன்களில் அவர் பரிதாபமாக வெளியேறினார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு உகந்தவரா என்பதை முடிவு செய்யவே சில காலம் தேவைப்படும். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஜேம்ஸ் ஆண்டர்சனை மேலேறி வந்து அடித்தார். ஆனால் மொயீன் அலியின் சாதுவான பந்திற்கு எட்ஜ் செய்து அவுட் ஆகி வெளியேறினார்.
மொயீன் அலிக்கு நாம் அதிக மரியாதை கொடுக்கிறோம் என்று கூறிய தோனி அவரை அடித்து ஆட முயன்றார் அவரது மிட்விக்கெட்டை நோக்கிய 20-20 ஷாட் கேரி பாலன்ஸைத் தாண்டவில்லை. வெளியேறினார். அஸ்வின் மட்டுமே ஒரு டெஸ்ட் பேட்ஸ்மெனுக்கான அத்தனை தகுதிகளுடன் விளையாடினார். கட், புல் என்று அவர் அசத்தினார். மேலும் மொயீன் அலியை அவர் மேலேறி வந்து லாங் ஆனில் ஒரு சிக்சரையும் விளாசினார். 56 பந்துகளில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த அவர் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். புவனேஷ் குமார் 10 ரன்கள் எடுத்து நன்றாகவே ஆடினார். ஆனால் தேவையில்லாத 2வது ரன்னிற்குச் சென்று அவுட் ஆனார்.
இங்கிலாந்து தரப்பில் மொயீன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்த, ஆண்டர்சன், ஜோர்டான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற வோக்ஸ் ஒரே விக்கெட்டைக் கைப்பற்றினார்.
மொத்தமே இந்தியா 2 இன்னிங்ஸ்களிலும் 90 ஓவர்களை ஆடவில்லை. இதுதான் இந்திய பேட்டிங் தரத்தை விவரிக்கும் சாராம்சமாகும். ஆட்ட நாயகனாக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago