முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக் கோவில்!

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2014      ஆன்மிகம்
Image Unavailable


நியூயார்க், ஆக.11 - குஜராத் மாநில மக்களால் வணங்கப்படும் சுவாமி நாராயண கோவில், அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி நகரியத்தில் இந்த வார இறுதியில் திறக்கப்பட உள்ளது. இது ரூ.108 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராபின்ஸ்விலி பகுதியில் நியூ ஜெர்சி நகரியம் உள்ளது. இதன் மக்கள் தொகை சுமார் 13,600 ஆகும். இதில் சுமார் 12 சதவீதம் ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்கள், நயூயார்க்கில் இருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரம் தெற்கு Lிசையில் பயணம் செய்து, நியூ ஜெர்சி நகரியத்தை அடையலாம்.
அமெரிக்காவில் வசிக்கும் குஜராத்தி சமூகத்தினர், அங்கு ஏற்கெனவே சுமார் 70 கோவில்களை கட்டி இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் விட பிரமாணடமான முறையில் சுவாமி நாராயண் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் 160 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில் கட்டப்பட்டுள்ளது பிரதான கோவில் 134 அடி நீளமும், 87 அகலமும் கொண்டது. இங்கு 108 தூண்களும், மூன்று கர்ப்பக்கிரகங்களும் அமைந்துள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்ட கோவில்களில் சுண்ணாம்பு, இரும்பு, கான்கிரீட் போன்றவை பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்புதிய கோவில் முற்றிலும் இத்தாலி நாட்டு சலவைக்கற்களால் ஆனது.
கோவில் இந்து சிறப சாஸ்திர முறைப்படி கட்டப்பட்டுள்ளது. கோவிலின் தரை, உட்புற கூரை, சுவர்கள் முழுவதும் சிலைகள், சிற்பங்கள், ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோவிலை அமைக்க மொத்தம்18 மில்லியன் டாலர் செலவானது. இக்கோவில் இந்த வார இறுதியில் திறக்கப்பட உள்ளது. 93 வயதாகும் தலைமை குரு பிரமுக் சுவாமி மகாராஜ் திறந்து வைக்க உள்ளார். அப்போது யாகங்கள் நடைபெற்று, சிலைகள் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு நிறுவப்படும்.
நிகழ்ச்சியில் அமெரிக்கா முழுதிலும் இருந்து சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago