முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு மெகா விடுதிகள்

திங்கட்கிழமை, 11 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable


சிங்கப்பூர், ஆக.12 - வெளிநாடு களிலிருந்து சிங்கப்பூருக்குப் பணிபுரிய வந்துள்ளவர்கள் தங்குவதற்காக ஒருங்கிணைந்த மாபெரும் விடுதிகளை அந்நாட்டு அறசு அமைத்து வருகிறது. 16,800 தங்கக் கூடிய முதல் மெகா விடுதி இம்மாதம் திறந்துவைக்கப்பட இருக்கிறது.
சிங்கப்பூரில் கட்டிடம் மற்றும் கடல்சார் தொழிவ்களில் பணிபுரிய சுமார் 3.85 லட்சம் வெளிநாட்டவர் பணி உரிமம் பெற்றுள்ளனர். இவர்கள் தங்குவதற்கு ஒருங்கிணைந்த குடியிருப்பு விடுதிகளை அந்நாட்டு அரசு  அமைத்து வருகிறது. தங்கும் வசதியுடன், வணிக வளாகம், உணவு விடுதி, மது விடுதி, 250 பேர் அமரும் திரையரங்கு ஆகியவை கொண்ட இந்தக் குடியிருப்பு 4.8 ஹெக்டர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது போல், மேலும் 9 விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 லட்சம் பேர் தங்குவதற்கான வசதியுள்ள குடியிருப்புகள் சிங்கப்பூரில் உள்ளனர். புதிய திட்டம் மூலம் மேலும் ஒரு லட்சம் பேர் தங்க வசதி ஏற்படுத்தப்பட்டும். இழை ஒருங்கிணைந்த வசதிகளைக் கொண்ட குடியிருப்புகளாக அமையும். சிங்கப்பூரில், குட்டி இந்தியா என்று அறிவிக்கப்படும் பகுதியில் சென்ற ஆண்டு டிசம்பரில் தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து கலவரம் வெடித்தது. கடந்த 40 ஆண்டுகளில் இதுவே மிக மோசமான கலவரமாக கருதப்படுகிறது.
கலவரம் குறித்த விசாரணை அறிக்கையில், தங்குமிட மேம்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு வசதிகள் கொண்ட ஒருங்கிணைந்த விடுதிகளை அமைக்க அரசு தீர்மானித்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்