முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்திய தூதருக்கு பாக்., சம்மன்

செவ்வாய்க்கிழமை, 12 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.13 - இந்திய ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தான் அரசு அங்குள்ள இந்திய துணை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர் அத்துமீறல் நடந்து வருவதால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தினர், எல்லையில் அவ்வப்போது அத்துமீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி, இந்திய வீரர்கள் சுட்டதாகவும், அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

இதுகுறித்து கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய துணை தூதர் கோபால் பாக்லேயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அளித்துள்ளது. அதில், இருதரப்பு உறவுகளும் மேம்பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் விரும்பும் இந்த வேளையில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்