முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலா பரவலைத் தடுக்க நடவடிக்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்

புதன்கிழமை, 13 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஆக.14 - எபோலா வைரஸ் குறித்த அச்சத்தைத் தவிர்த்து, அந்த நோய் பரவுவதை தடுக்க உலக நாடுகள் விரைவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த வைரஸ் நோயை தடுப்பதற்காக ஐ.நா.வின் ஒருங்கிணைப்பாளாராக இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் நாபேரா என்ற மருத்துவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறுகையில், "எபோலா வைரஸ் பரவமால் தடுக்க முடியும் என்பதால் அதுகுறித்து பீதியடையத் தேவையில்லை.

தற்போது அச்சத்தை தவிர்த்து, எபோலாவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மட்டுமே அதிகப்படுத்த வேண்டும். கினியா, லைபீரியா, சியரா லியொன் உள்ளிட்ட நாடுகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை தீர்க்க வழி செய்ய வேண்டும். பற்றாக்குறையை தீர்க்க ஐ.நா. நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பிரச்சினைகளை தீர்க்கலாம்.

போதுமான விழிப்புணர்வு, நோய்த் தொற்று குறித்த அறிவு, ஆரம்ப நிலையிலான நடவடிக்கை மூலம் நோயை தடுத்து விட முடியும்" என்றார் பான் கி மூன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago