முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை விடுவித்த மீனவர்கள் ஓரிரு நாளில் திரும்புவர்

வியாழக்கிழமை, 14 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, ஆக.15 - ராமேஸ்வரம் பகுதி தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க கச்சத்தீவு அருகே செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்குவதும், சிறைபிடித்து செல்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. மேலும் மீனவர்களின் படுககளும் பறிமுதல் செய்யப்படுகிறது.

ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வதும், பின்னர் மத்திய மாநில அரசுகளில் நடவடிக்கையால் அவர்கள் விடுதலை செய்யப்படுவதுமாக இருந்து வருகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படகுகளை விடுவிக்க இலங்கை அரசு மறுத்துவ வருகிறது. எனவே மீனவர் பிரச்னைக்கு நிரந்த தீர்வு காணவும், இலங்கை வசம் உள்ள படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக-இலங்கை மீனவர்களுக்கிடையே நடைபெற்ற 2 சுற்று பேச்சுவார்த்தையிலும் எவ்வித சுமுக தீர்வும் ஏற்படவில்லை. இதனால் தமிழக மீனவர்கல் மற்றும் அவர்களது படகுகளை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள், படகுகளில் வெள்ளைக் கொடி கச்சத்தீவுக்கு செல்லும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் அப்போராட்டத்தை கைவிட்டனர்.

தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 93 பேரும் உள்ளனர். மேலும் 62 படகுகளும் இலங்கை வசம் உள்ளது. இந்நிலையில், சுதந்திர தினத்தையொட்டி இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிபர் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அனைவரும் விடுவிக்கப்ப்டடனர். அவர்கள் இன்னும் ஓர்ரிரு நாளில் ஊர் திரும்புவார்கல் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்