முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகரெட்க்கு தடை கோரி மனு: சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.16 - சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு நாடு முழுவதும் முழுமையாக தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்ற சுப்ரீம் கோர்ட், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சுனில் ராஜ்பால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. புகையிலைப் பொருட்களால் பாதிக்கப்படுவோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவிடப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு நாடு முழுவதும் முழுமையாக தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இம்மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆதித்யா அகர்வால் ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago