முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் விவகாரம்: இந்தியா- பாக்., உறவில் விரிசல்

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக.16 - காஷ்மீர் விவகாரத்தாலேயே இந்தியா- பாகிஸ்தான் உறவில் பதற்றம் நிலவுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்த காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதித் திர்வு காண வேண்டும், என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.

அந்நாட்டு சுதந்திர தின விழா வையொட்டி ஆற்றிய உரையில் இது குறித்து அவர் கூறியதாவது:

காஷ்மீர் விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புகிறோம். இதனால் இருதரப்பு உறவில் நிகழும் பதற்றத்தை போக்க முடியும். அதன் மூலம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டறிய இயலும். அண்டைநாடுகளுடன் அமைதியை ஊக்குவிப்பதே எங்களது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

பாகிஸ்தான் அமைதியான நாடு. எங்கள் நாட்டினுல் அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ நாங்கள் வரும்புகிறோம். ஆப்கானிஸ்தானிலும் நீடித்த அமைதி நிலவ வேண்டும். அதன் மூலம் அந்தப் பகுதியே வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட இயலும் என்றும் நவாஸ் கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டு பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப் போரில் ஈடுபட்டு வருகிறது. நேரில் போரிட துணிவில்லாததால் அவ்வாறு மறைமுகப் போரில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீஃப் மேற்கண்டவாறு பேசியுள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டின் முப்படை தளபதிகள், அமைச்சர்கள், தூதர்கள், உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago