முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ஃபெடரர் புதிய சாதனை!

வெள்ளிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

சின்சினாட்டி, ஆக.16 - ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் 300-வது வெற்றியைப் பதிவு செய்தார் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர். சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் ஃபெடரர்தான்.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் 7-6 (4), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவின் வசேக் போஸ்பிஸிலை தோற்கடித்ததன் மூலம் ஃபெடரர் புதிய சாதனையை எட்டினார்.

ஃபெடரர் தனது 200-வது மாஸ்டர்ஸ் வெற்றியையும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில்தான் பதிவு செய்தார். அப்போது லெய்டன் ஹெவிட்டை தோற்கடித்தார். போஸ்பிஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் செட்டை டைபிரேக்கர் வரை சென்று கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த செட்டில் துரதிருஷ்டவசமாக 12-வது கேமில் தனது சர்வீஸை இழந்து அந்த செட்டையே கோட்டைவிட்டார். பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் அபாரமாக ஆடிய ஃபெடரர் 6-2 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

இதுவரை 5 முறை சின்சினாட்டி மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் ஃபெடரர், போஸ்பிஸிலுக்கு எதிராக 6 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அடுத்த சுற்றில் பிரான்ஸின் மான்பில்ஸை சந்திக்கிறார் ஃபெடரர்.

தைவானின் லூ யென் ஷன் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சுக்கும், போலந்தின் ஜெர்ஸி ஜானோவிச் 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்திலிருந்த பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவுக்கும் அதிர்ச்சி தோல்வியளித்தனர்.

ஸ்பெயினின் டேவிட் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்டோர் 2-வது சுற்றில் வெற்றி கண்டு 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்