ஜன் தான் திட்டம்: அமெரிக்கா- இந்திய கவுன்சில் பாராட்டு

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.17 - மோடி அறிவித்துள்ள ஜன் தான் திட்டமானது இந்தியாவின் அடுத்தகட்ட சமூக, பொருளாதார வள்ச்சியை நோக்கிய முக்கிய நடவடிக்கை என்று அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் பாராட்டியுள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியக் குடிமக்களில் பெரும்பாலான பிரிவினருக்கு நிதிச் சேவைகளைக் கிடைக்கச் செய்வதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் அடுத்தகட்ட சமூக, பொருளாதார வளர்ச்சியை நோக்கிய முக்கிய நடவடிக்கையாகும். இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைக்கு அமெரிக்க முதலீட்டாளர்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சிலின் நிர்வாகக் குழு உறுப்பினர் விஜய் அத்வானி கூறுகையில், பெரும்பாலான இந்தியர்களுக்கு அடிப்படை வங்கி, நிதிச் சேவைகள் கிடைக்காமல் இருக்கும் சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது. அனைவரையும் உளஅளடக்கிய நிதித் திட்டத்தில் இந்திய அரசு சுவனம் செலுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: