இந்திய எல்லையில் சீனா புதிய ரெயில் பாதை

சனிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், ஆக.17 - சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீபெத்தில் 2-வது புதிய பெயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திபெத் மாகாண தலைநகரான லாசாவையும், ஸிகாஷாவையும் இணைக்கும் வகையில் 253 கி.மீ. தூரத்துக்கு இந்த ரெயில் பாதை போடப்பட்டுள்ளது.

ரூ.216 கோடி செலவில் அது உருவாக்கப்பட்டுள்ளது. இது சிக்கிம் மாநிலத்தின் அருகே இந்திய எல்லையை யொட்டி உள்ளது. இது இங்கு போடப்பட்டுள்ள 2-வது ரெயில் பாதை இதுவாகும். மேலும் உலகிலேயே மிக உயரரமான இடத்தில் அமைந்துள்ள ரெயில் பாதை என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்தியா மட்டுமின்றி நேபாளம் மற்றும் பூடான் எல்லைகளை ஒட்டியும் இது அமைந்துள்ளது.

இதன் மூலம் லாசா- ஸிகாசா இடையே நெடுஞ்சாலையில் செல்லும் தூரத்தை விட 4 மணி நேரம் முன்னதாக செல்ல முடியும். அதில் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இந்த திட்டம் கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய எல்லைப் பகுதியிலேயே சீனா புதிய ரெயில் பாதைகளை அமைத்து வருகிறது. கடந்த மாதம் திபெத்தில் அருணாசல பிரதேச மாநிலத்தையொட்டி புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான பணியை தொடங்கியது. இந்த புதிய ரெயில் பாதை பணி முடியும் பட்சத்தில் சீன ராணுவம் திபெத் பகுதிக்கு அதிவிரைவாக செல்ல முடியும்.

இது தவிர கிழக்கு பகுதியில் லாசா- நியிங்சி இடையே புதிய ரெயில் பாதை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் அருணாசல பிரதேச எல்லையை ஒட்டி வருகிறது. அருணாசலப்பிரதேசம், திபெத்தை சேர்ந்தது என சீனா பிரச்சினையை கிளப்பி உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு சீனா மறைமுக அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: