ராட்சத விண்கல் மோதி 2880-ஆம் ஆண்டில் உலகம் அழியும்?

ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், ஆக.18 - 2880ம் ஆண்டு ராட்சத விண்கல் மோதி உலகம் முற்றிலுமாக அழிந்து விடும் அபாயமிருப்பதாக இப்போதே பயமுறுத்தத் தொடங்கி விட்டனர் விஞ்ஞானிகள்.

இந்நிலையில், 2880ம் ஆண்டு உலகம் அழிந்து விடுவதற்கான சாத்தியம் இருப்பதாக விஞ்ஞானிகள் புதிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டென்னிசே பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில், மிகப்பெரிய ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி சுழன்றபடி பாய்ந்து வருவது தெரியவந்துள்ளதாம். அந்த விண்கல்லிற்கு ‘1950 டிஏ' என பெயரிட்டுள்ளனர். அது 44,800 மெகா டன் எடையும், 1 கிலோமீட்டர் அகலமும் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது வினாடிக்கு 9 மைல் வேகத்தில் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாகவும், 2880-ம் ஆண்டில் இது மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பூமியை தாக்கும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அப்படி இந்த விண்கல் மோதினால், பூமி அதிபயங்கர சத்தத்துடன் வெடித்து, தட்ப வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பேரழிவு ஏற்படுமாம். அதன் மூலம் மனித குலம் முற்றிலுமாக அழியும் என அவர்கள் ஆருடம் கூறுகின்றனர்.

அதே நேரத்தில் இந்த விண்கல் பூமியை மோதாமல் தடுக்க முடியும் என்றும் ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொரு தரப்பினரோ, இந்த விண்கல் பூமியில் மோதுவதில் 300 -ல் ஒரு வாய்ப்பு தான் உள்ளது என்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: