முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி மோசடி: அபர்னா சென்னிடம் விசாரணை

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

கொல்கத்தா, ஆக.19 - மேர்குவங்காளம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் நடை பெற்ற சாரதா நிதிநிறுவன மோசடி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியது. ரூ.10 ஆயிரம் கோடி அளவில் நடைபெற்ற இந்த மோசடியில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

சாரதா குரூப் நிறுவனம், கம்பெனி சட்ட விதிகளை மீறி இருந்தால் அமலாக்க துறையும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பாக மேர்கு வங்காள் சினிமா தயாரிப்பாளர் அபர்னா சென்னிடம் அமலாக்க பிரிவினர் நேற்று விசாரணை நடத்தினார்கல். நடிகை, டைரக்டராக பணிபுரிந்து 3 தேசிய விருதுகளை பெற்ற அவர் சாரதா நிறுவனத்தை தொடங்கி வைத்துள்ளார். இதன் காரணமாக அபர்னா சென்னியிடம் விசாரணை மேர்கொள்ளப்பட்டது.

இதேபோல் மேற்கு வங்காள ஜவுளி துறை மந்திரி ஷியாம்படா முகர்ஜியிடமும் இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு நேற்று விசாரணை நடத்தியது. சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மம்தா பானர்ஜி அரசில் உள்ள மந்திரி ஒருவர் விசாரிக்கப்பட இருப்பது முதல் முறையாகும். பானர்ஜி சாரதா குரூப்புக்கு சில நிலங்களை விற்றுக் கொடுத்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்