அமெரிக்காவில் 2 சரக்கு ரயில்கள் மோதி 2 பேர் பலி

திங்கட்கிழமை, 18 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.19 - அமெரிக்காவில் ரசாயனங்களை ஏற்றி வந்த 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் சரக்கு பெட்டிகள் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தன. விபத்தில் 2 பேர் பலியானார்கல், 2 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் அர்கான சாஸ் மாநிலத்தின் வடகிழக்கே ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இருந்து நச்சு திரவ ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது. அதே நேரம் மற்றொரு சரக்கு ரயில் கழிவு ரசாயனத்தை ஏற்றி கொண்டு அந்த தொழிற்சாலைக்குத் திரும்பி கொண்டிருந்தது. இந்த 2 சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால், ஸஹாக்சி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

ரயில்களின் மோதலை தொடர்ந்து, வேகன்களில் இருந்து நச்சு ரசாயனங்கல் கசிந்தன. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்கன்சாஸ் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். அப்பகுதியில் வசித்த 3 ஆயிரத்துக்கும் மேர்பட்ட மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினார்கள். பின்னர், சரக்கு ரயில்களில் இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சரக்கு ரயில்களில் இருந்த 2 ஊழியர்கள் பலியானார்கல்.

மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே பாதையில் 2 சரக்கு ரயில்களும் வந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது என்று அர்கன்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: