முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தீவிரவாதிகளின் 90 முகாம்கள் தகர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஆக.20 - ஈராக்கில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். சிரியாவின் ஒரு பகுதியையும், ஈராக்கின் வடக்கு பகுதியையும் கைப்பற்றிய தீவிரவாதிகள் கலிபாத் எனப்படும் சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவித்தனர். தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்காவின் உதவியை ஈராக் நாடியது.

மேலும், சிஞ்சார் மலைப்பகுதிகளில் கிறிஸ்தவ பழங்குடியினர் உள்ளிட்ட ஏராளமானோரை தீவிரவாதிகள் பிணைபற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இங்கு அமெரிக்காவுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கல் இருப்பதால் தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்தது.இதனையடுத்து கடந்த 8-ஆம் தேதி முதல் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களின் மீது அமெரிக்க விமானங்கல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:

ஈராக்கின் வடக்கில் உள்ள மொசூல் அணையை கைப்பற்றி அதனை சுற்றி முற்றுகையிட்டிருந்த தீவிரவாதிகளின் வாகனங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால், அணை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு பாதுகாப்புக்கு ஈராக் படைகள் சென்றுள்ளன. கடந்த 3 நாட்களில் மட்டும் தீவிரவாதிகளின் 90 இலக்குகள் மீது அமெரிக்கா விமானங்கல் குண்டுகளை வீசி தாக்கின. இதில் பதுங்கும் இடங்கள், பீரங்கிகள், போர் தளவாடங்கள் ஆகியவை வீழ்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஜான் கிர்பி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்