முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. குழுவை அனுமதிக்க முடியாது: ராஜபக்சே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஆக.20 - இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சில் நியமித்துள்ள குழுவினரை அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரில் ஏராளமான அப்பாவி தமிழ் மக்கள் கொள்ளப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், இலங்கை ராணுவத்தில் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஒரு குழுவை அமத்துள்ளது. இதை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு தரப்பில் ஏற்கெனவே கருத்து கூறப்பட்டு வந்தது.

எனினும், இலங்கை அதிபர் ராஜபக்சே எதுவும் கூறாமல் இருந்தார். இந்நிலையில் கொழும்பில் தனது இல்லத்தில் வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களை அதிபர் ராஜபக்சே நேற்று காலை சந்தித்த போது கூறியதாவது:

ஐ.நா. குழு விசாரணையை நாங்கள் ஏற்க முடியாது என ஏற்கெனவே தெரிவித்திருக்கிறோம். எனவே, ஐ.நா. விசாரணை குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கமுடியாது. அதே சமயம் ஐ.நா.வின் மற்ற அமைப்புகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று ராஜபக்சே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்