முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிவினைவாதத் தலைவர்களுடனான சந்திப்பு அவசியமானதே

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.21 - காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுடனான சந்திப்பு அவசியமானதுதான் என்றும், அதேவேளையில் இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவைத் தொடரவே தமது நாடு விரும்புகிறது என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.

இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சு வார்த்தை கடந்த திங்கள்கிழமை திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களுடனான சந்திப்பை நியாயப்படுத்தி பேசியுள்ளதோடு, அனைத்து தரப்பினரையும் கலந்தாலோசிப்பது அடிப்படை தேவை என பாகிஸ்தான் தூதர் அப்துல், டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, 'இந்தியச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தடைபட்டது எதிர்காலத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. இது ஒரு நெருக்கடியான நிலை என்பது புரிகிறது. ஆனால், பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கு பாகிஸ்தான் எப்போதும் இடையூறாக இருக்காது" என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்