முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவிசாஸ்திரியிடம் அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், ஆக.21 - இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இயக்குனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

டெஸ்ட்தொடரில் இந்திய அணியின் மோசமான செயல்பட்டதால் அதிரடி நடவடிக்கைகளை கிரிக்கெட் வாரியம் எடுத்தது. இதுகுறித்து முன்னாள் கேப்டனும், டிவி. வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

ரவிசாஸ்திரியை இயக்குனராக நியமிக்கப்பட்டதை மிகவும் வரவேற்கிறேன். அவரிடமும், உதவி பயிற்சியாளர்களிடமும் உடனே அற்புதத்தை எதிர்பார்க்க முடியாது. அதற்கு சில காலம் பிடிக்கும். அதுவரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும். பயிற்சியாளர்கள் வீரர்கள் இடையே நல்ல புரிந்துணர்வு அவசியம். ஆணால் வெளிநாட்டு பயிற்சியாளர்களின் பேசும் ஆங்கிலத்தை வீரர்கள் தசிலர் புரியாமல் இருக்கலாம்.

இந்தியர்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டால் அந்த பிரச்சினை ஏற்படாது. ஏனென்றால் சரியான புரிந்துணர்வு அணிக்கு மிகவும் முக்கியம். 2004-ஆம் ஆண்டு ஜான் ரைட் பயிற்சியாளராக இருந்தபோது நான் பேட்டிங் ஆலோசகராக நியமிக்கப்பட்டேன். அணியில் வீரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. ஜான் ரைட் பணியில் தலையிட விரும்பதால் அந்த பணியை தொடரவில்லை. விலகிவிட்டேன். இயக்குனராக நியமிக்கப்பட்ட ரவிசாஸ்திரி எந்த பணியில் ஈடுபடுவார் என்று எனக்கு தெரியாது. அதை அவர் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.

தற்போது அணியின் வயது சராசரி 30-க்கு கீழ் இருக்கிறது. இளம் வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல். பயிற்சி தேவை. தவறான பயிற்சி அளித்தால் அது அணியை தான் பாதிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்