முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கில் தயாளு அம்மாளை விடுவிக்க மறுப்பு

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.21 - 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி. கனிமொழி உட்பட அனைவருக்கும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. அதேவேளையில், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் தயாளு அம்மாளின் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், ஸ்வான் டெலிகாம் நிர்வாகி ஷாஹித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா, கலைஞர் டி.வி. முன்னாள் இயக்குநர் சரத்குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் காய்கனி நிறுவன இயக்குநர்கள் ஆசிப் பால்வா, ராஜிவ் அகர்வால் இவர்களுடன் பி.அமிர்தம் என 10 பேர் மீது அமலாக்கப்பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இவர்களைத் தவிர இந்த வழக்கில் ஸ்வான் டெலிகாம், குசேகான் ரியால்டி, சினியுக் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடட், கலைஞர் டி.வி, டைனமிக்ஸ் ரியால்டி, எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்‌ஷன், கான்வுட் கன்ஸ்ட்ரக்‌ஷன் அண்ட் டெவலப்பர்ஸ், டிபி ரியால்டி, நிஹார் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் ஆகிய 9 நிறுவனங்கள் மீதும் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது .

முன்னதாக நேற்று முற்பகல் தயாளு அம்மாளின் ஜாமீன் வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஓ.பி.சைனி, "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அமலக்கப்பிரிவினர் தொடர்ந்த வழக்கில் தயாளு அம்மாளுக்கு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. சொந்த ஜாமீனக்காக ரூ.5 லட்சம் பிணைத் தொகையை அவர் செலுத்த வேண்டும். இதே மதிப்பீட்டில் மேலும் இரண்டு பேர் தயாளு அம்மாளுக்காக உறுதித் தொகையை அளிக்க வேண்டும். இரண்டு நாட்களுக்குள், தயாளு அம்மாள் தரப்பு ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.

வயோதிகம் காரணமாக ஞாபகசக்தி குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 2ஜி வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்திருந்ததார். ஆனால், தயாளு அம்மாளுக்கு ஜாமீன் வழங்கியபோதும் அவரை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தயாளு அம்மாளுக்கு 83 வயதாகிறது.

முன்னதாக, அமலாக்கப் பிரிவு தொடர்ந்துள்ள வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் மீது, சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனியால் ஆகஸ்ட் 7-ம் தேதியே தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், தீர்ப்பு நிறைய பக்கங்களுக்கு இருப்பதால், இன்னும் தயாராகவில்லை என்று கூறி, ஆகஸ்ட் 20-ஆம் தேதி (இன்றைக்கு) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி, இன்று ஜாமீன் மனுக்கள் மீது டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.

ஜாமீன் மனுக்கள் மீது தீர்ப்பு வெளியாவதையொட்டி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago