முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயந்திர கோளாறு: 189 விமான பயணிகள் தப்பினர்

புதன்கிழமை, 20 ஆகஸ்ட் 2014      வர்த்தகம்
Image Unavailable

 

திருவனந்தபுரம், ஆக 21:

திருவனந்தபுரத்தில் இருந்து துபாய்க்கு வழக்கமாக மாலை 4.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் அந்த விமானம் புறப்பட தயாரான போது அந்த விமானத்தில் இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் அந்த விமானம் தாமதமாக இரவு 7.57 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த விமானத்தில் 189 பயணிகள் இருந்தனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடுவானில் அந்த விமானத்தின் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே அவர் இந்த தகவலை திருவனந்தபுரம் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். அவர்கள் அந்த விமானத்தை மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கும்படி கூறினார்கள். மேலும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்களும் ஆம்புலன்சுகளும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமானி விமானத்தை தரையிறக்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். விமான நிலைய அதிகாரிகள் அறிவுரைப்படி அந்த விமானத்தில் இருந்த எரிபொருள் கடலில் கொட்டப்பட்டது. அதன் பிறகு அந்த விமானம் மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இரவு 10.30 மணிக்கு பத்திரமாக தரையிறங்கியது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த 189 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்