முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மனைவி பலி

வியாழக்கிழமை, 21 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஜபாலியா, ஆக 22 - பாலஸ்தீனத்தின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஹமாஸ் இயக்க தலைவரின் மனைவி, குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் பலியானார்கள். காசாவில் மீண்டும் சண்டை தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 8ம் தேதி ஹமாஸ் தீவிரவாதிகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஹமாஸ் பதுங்குமிடங்களை குறி வைத்து காசா மீது இஸ்ரேல் ராணுவமும் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலை மேற்கொண்டது. இந்த சண்டையில் 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் தரப்பில் ராணுவத்தினர் உட்பட 56 பேர் உயிரிழந்து உள்ளனர்.

காசா பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர எகிப்து தலைநகர் கெய்ரோவில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதை தொடர்ந்து 5 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மீண்டும் இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் இயக்க தலைவர்களின் வீடுகள் மீது வான்வழி தாக்குதலை மேற்கொண்டது. இதில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான முகமது தையீப்பின் மனைவி விதாத் மற்றும் 7 மாத ஆண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தினர் 7 பேர் பலியானார்கள். அவர்களது இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை ஜபாலியா அகதிகள் முகாமில் இருந்து கிளம்பியது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலை பழிவாங்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டபடி சென்றனர். இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ஹமாஸ் தீவிரவாதிகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேல் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. மீண்டும் சண்டை தீவிரமாகி உள்ளதால் காசா மக்கள் ஐ.நா பாதுகாப்பு முகாம்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்