முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளி: தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்தன

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக 23 - நடப்பாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் அனைத்து வகுப்புகளுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கான ரயில் முன்பதிவு கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் தங்கி வேலை பார்க்கும் தொழிலாளர்கள், பணியாளர்கள், சொந்த தொழில் செய்வோர், சொந்த ஊருக்கு செல்ல ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர். பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் ரயில்களில் எப்போதும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 22ம் தேதி வருவதால் அதற்கு முந்தைய வார இறுதி நாளான அக்டோபர் 17ம் தேதி தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் 2ம் வகுப்பு படுக்கை வசதிகள் நிரம்பி விட்டன.

அக்டோபர் 18,19ம் தேதிகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவும் தொடங்கி விட்டதால் அந்த நாள்களில் பயணம் செய்வதற்கான 2ம் வகுப்பு படுக்கை வசதி காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. மேலும் 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் குறைந்த இடங்களே காலியாக உள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர், தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு மையங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்து நின்ற பயணிகளுக்கு டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. வரிசையில் நின்ற முதல் 5 பேருக்கு மட்டுமே டிக்கெட்டுகள் கிடைத்தன. அதற்குள்ளாக காத்திருப்போர் பட்டியல் மளமளவென உயர்ந்தது. இதனால் அதிகாலை முதல் வரிசையில் நின்ற பயணிகள் ஏமாற்றத்துடன் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டை பெற்று சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்