முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளபதி தாய்லாந்தின் பிரதமராகத் தேர்வு

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பாங்காக், ஆக.23 - தாய்லாந்தின் ராணுவத் தளபதியாக இருந்த பிரயுத் சான் ஓச்சா அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் போது தளபதி பிரயுத் சான் ஓச்சா பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்மொழிந்தார். இதனை 188 உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். சான் ஓச்சாவுக்கு ஆதரவாக 191 வாக்குகள் கிடைத்தன. எவரும் அவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை. அவருக்கு எதிராக யாரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தின் 197 உறுப்பினர்களில் 194 பேர் அவைக்கு வந்திருந்தனர். அவையின் தலைவர், இரு துணைத் தலைவர் வாக்களிக்கவில்லை.

நாடாளுமன்றத்தில் வாக்கு நடைபெற்ற போது தளபதி சான் ஓச்சா ராணுவ முகாம் ஒன்றை பார்வையிட சென்றிருந்தார். நாடாளுமன்ற வாக்கெடுப்பை அடுத்து அதன் முடிவு தாய்லாந்து அரசரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசரின் ஒப்புதல் கிடைத்தப்பிறகே முறையாக தளபதி சான் ஓச்சா பதவி ஏற்பார் என தெரிகிறது. அவர் அந்த நாட்டில் 29-வது பிரதமராக பதவி வகிப்பார். இதுகுறித்து சான் ஓச்சா கூறியதாவது:

பிரதமராக விரைவிலேயே பொறுப்பெற்று செலாற்ற விரும்புகறேன் என்றபோதிலும் முறையாக அரசர் தன்னை பிரதமராக அறிவித்தப் பின்னரே எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வேன் அமைதி ஒழுங்குக்கான தேசிய கவுன்சில் நிர்ணையிக்கும் கால கெடுவுக்குள் செயல்திட்டங்களை அமல்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்தார். தாய்லாந்தில் கடந்த மே மாதம் ராணுவ ஆட்சி அமலுக்கு வந்தது. நாட்டின் முதல் பெண் பிரதமரான யிங்லக் ஷினவத்ரா தலைமையிலான அரசு அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்பளித்தது, சர்ச்சையை எழுப்பியது. அதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மே 22-ஆம் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது தாய்லாந்தில் அரசியல் சாசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ராணுவ ஆட்சியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2015-ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது அமைதி, ஒழுங்குக்கான தேசிய கவுன்சிலின் திட்டம். 2006-ஆம் ஆண்டிலிருந்தே தாய்லாந்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்