முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் 2 தமிழர்கள் துணை அமைச்சர்களாக நியமனம்

வெள்ளிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

கொவும்பு, ஆக.23 - இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை துணை அமைச்சர்களாக இலங்கை அதிபர் ராஜபக்சே நியமித்துள்ளார். இவர்களுக்கு கடந்த வியாழக்கிழமை அன்று பதவி பிரமானம் செய்து வைக்கப்பட்டது.

இந்திய வம்சாவளி தமிழர்கள் கனிசமாக வசிக்கும் ஊவா மாகாணத்தில் அடுத்த மாதம் 20-ஆம் தேதி தேர்தல் நடத்த உள்ள நிலையில் இரு தமிழர்களை அதிபர் ராஜபக்சே நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபாகணேசன், ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினராவார் இவருக்கு தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். பி.திகம்பரம், தேசிய தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவருக்கு தேசிய மொழிகள், சமூக ஒற்றுமை ஆகிய துறைகளின் துணை அமைச்சராக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐக்கிய தேசிய கட்சியின் கீழ் போட்டியிட்ட இவர்கள் பின்னர் மகிந்த ராஜபக்சேவின் அரசுக்கு தம் ஆதரவை தெரிவித்தனர். இவர்கள் இருவரும் பதவி யேற்றுள்ள நிலையில் ராஜபக்சேவின் அமைச்சரவையில் துணை அமைச்சர்களின் எண்ணிக்கை 42-ஆகியுள்ளது அமைச்சரவையில் மொத்தம் 67 அமைச்சர்கள் உள்ளனர்.

ஊவா மாகாண தேர்தலானது இலங்கை பொதுத் தேர்தல், அதிபர் தேர்தல் ஆகியவற்றுக்கு முன்னொடியாக கருதப்படுகிறது. இவ்விரண்டு தேர்தல்களும் 2016-ஆம் ஆண்டு நடைபெற உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்