முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைன் விவகாரம்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சனிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

கீவ், ஆக.24 - கிழக்கு உக்ரைனில் நிவாரண பொருட்களை வங்குவதாக கூறி, ரஷ்ய படைகள் ஊடருவி வருகின்றன. அவர்கள் உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், ரஷ்யாவின் மீது மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியான கிரீமியாவை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். அதன் பின் அங்கு வாக்கெடுப்பு நடத்தி அதை ரஷ்யாவுடன் இணைத்தனர். அத்துடன், உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ள பல்வேறு பகுதிகளிலும் ரஷ்ய ஆதரவு குளர்ச்சியாளர்கள் ஊடுருவினர். அப்பகுதிகளில் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சண்டை நடந்து வருகிறது.

உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. ஐ.நா. ரஷ்ய படைகள் திரும் பெற வேண்டும் என்று கண்டனம் தெரிவித்தது. உக்ரைன் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தது. அதன் மீது அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகள் ஏராளமான பொருளாதார தடைகளை விதித்தன.

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களை கடந்த வாரம் ரஷ்யா அனுப்பியது. இதற்கு உக்ரைன் அரசு தடை விதித்தது. இந்நிலையில், நேற்று முன் தினம் முதல் உக்ரைன் எல்லை வழியாக அத்துமீறி நிவாரண பொருட்களை லாரிகளில் எடுத்து செல்கிறது. நிவாரணப் பொருட்களுடன் ரஷ்ய ராணுவ வீரர்களையும் அத்துமீறி அனுப்பி வைப்பதாக உக்ரைன் கண்டனம் தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து, உக்ரைன் பகுதிகளுக்கு ராணுவ வீரர்களை அனுப்புவதை ரஷ்யா நிறுத்தாவிட்டால், ரஷ்யாவின் மீது மேலும் பல தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென்ரோட்ஸ் வாஷிங்டனில் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்