முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடைத் தீவன ஊழல்: 23 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

ராஞ்சி, ஆக.25 - கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 4 முன்னாள் கருவூல அதிகாரிகள் உள்பட 23 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 முன்னாள் கருவூல அதிகாரிகள், 6 கால்நடைத் தீவன விநியோகிப்பாளர்கள் ஆகிய 10 பேரை சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் டோரண்டா பகுதியில் உள்ள கருவூலத்தில் கடந்த 1981-ஆம் ஆண்டிலிருந்து 1990-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.7 கோடி மோசடி செய்ததாக கருவூல அதிகாரிகள், கால்நடைத் தீவன விநியோகிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழ்ககு மீதான விசாரணை ராஞ்சியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், குற்றம் சாட்டப்பட்ட 4 முன்னாள் கருவூல அதிகாரிகள், 19 கால்நடைத் தீவன விநியோகிப்பாளர்கள் என மொத்தம் 23 பேர் குற்றவாளிகள் என்றும் இவர்களுக்கு தலா 5 முதல் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும் சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.கே.கௌதம் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்