முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, ஆக.25 - ஜப்பானின் மேற்குப் பகுதியில் பலத்த மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

ஹிரோஷிமா பகுதியில் பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் நிலச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மீட்புப் பணியில், காவல் துறையினர், தற்காப்புப் படை என்று அறியப்படும் ஜப்பானின் ராணுவத்தினர், பேரிடர் மீட்பு வீரர்கள் உள்பட சுமார் மூவாயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

ஹிரோஷிமா பகுதியில் மேலும் நிலச்சரிவுகள் ஏர்பட வாய்ப்புள்ளதால், 4,500 பேர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் தீவிரம் குறைந்ததும், மீட்புப் பணியின் போது 6 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்துடன் நிலச்சரிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

சேறு, சகதியில் மேலும் பலர் புதையுண்டிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. எனவே, மீட்புப் பணியில் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் தவிர்த்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்