முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் குண்டு வீச்சில் 13 மாடி வணி வளாகம் தரைமட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காஸா, ஆக.25 - பாலஸ்தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ள காஸா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இன்னும் போர் நடைபெறும் நிலையில் காஸா மீது இஸ்ரேல் போர் விமானங்களின் குணஅடு வீச்சு தொடர்கிறது. நேற்று முன் தினம் தெற்கு காஸாவில் ரபா நகரில் நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 6 மாடி கட்டிடம் இடிந்தது. ஷெரோப் என்ற இடத்தில் ஒரு குடியிருப்பு கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. அதில் 30 வீடுகள் இருந்தன. இந்த தாக்குதலில் ரபா பகுதியில் 13 மாடி வணிக வளாகமும் இடிந்து தரை மட்டமானது. அல் - ஷாபர் என்றழைக்கப்படும் இக்கட்டிடம் காஸா சிட்டியில் உள்ளது. ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர்கள் கூடி இங்கு ஆலோசனை நடத்துவதாக கிடைத்த தகவலின் பேரில் குண்டு வீசியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சமி அபிஷோரி மறுத்துள்ளார்.

இக்கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியது போர் குற்றம் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த தாக்குதலால் அங்கு உயிர் இழந்தவர்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதற்கிடையே இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago