முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி., இன்று மோதல்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்டல், ஆக.25 - இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோற்றது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-3 என்ற கண்ககில் இழந்தது. இதனால் இந்திய வீரர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஒரு போட்டி தொடரில் முதல் ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடக்கிறது. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு இந்திய அணி ஒருநாள் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி மிடிலக்ஸ் அணியை வீழ்த்தி இருந்ததால், டெஸ்ட் தொடர் தோல்வியால் ஒரு போட்டியில் பயிற்சியாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பலன் கிடைக்குமா என்று இன்று தெரியும்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் போட்டி அட்டவணை வருமாறு:

முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டலில் நடைபெறுகிறது. 2-வது ஒருநாள் போட்டி வருகிறது 27- ஆம் தேதி கார்டில் மைதானத்தில் நடக்கிறது. 3-வது ஒருநாள் போட்டி வருகிற 30-ஆம் தேதி நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. 4-வது ஒருநாள் போட்டி செப். 4-ஆம் தேதி பர்மிங்காம் மைதானத்தில் நடைபெறுகிறது. 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செப்.5-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

டெஸ்ட் தொடரில் சொதப்பி அணைவராலும் விமர்சனத்துக்கு உள்ளான விராட் கோலி ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடக் கூடிய மனநிலையில் உள்ளார். மேலும் ரெய்னாவின் வருகை ஒருநாள் போட்டி அணிக்கு கூடுதல் பலம் சேர்ககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் டோனியை பொறுத்தவரை இந்த தொடர் மிகுந்த நெருக்கடியானது. விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறப்பாக விளையாடி வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி ஆட வேண்டும். மேலும் விரர்களை தேர்வு செய்வதிலும் அவருக்கு சவால் காத்திருக்கிறது. இங்கிலாந்து அணி அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறது. டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. இன்றைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா :- டோனி (கேப்டன்), தவான், ரோகித் சர்மா, ரகானே, வீராட் கோலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, அஸ்வின், சஞ்சு, சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், தவால் குல்கர்னி, முகமது சமி, கரண் சர்மா, மொகித் சர்மா, உமேஷ்யாதவ்.

இங்கிலாந்து :- கூக் (கேப்டன்), கேரி பேலன்ஸ், இயன்பெல், மார்கன், அலெக்ஸ், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன் அலி, பட்லர், பென் ஸ்டோக்ஸ், டிரெட்வெல், ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜோர்டன், ஹென்றி, ஸ்டீவன்பின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்