முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன்: நவரத்திலோவை சமன் செய்வாரா செரீனா?

ஞாயிற்றுக்கிழமை, 24 ஆகஸ்ட் 2014      விளையாட்டு
Image Unavailable

 

நியூயார்க், ஆக.25 - இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று தொடங்குகிறது. செப்டம்பர் 8-ஆம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச், ரோஜர் பெடரர், ரோஸ்னிக், வாவரிங்கா, பெர்டிச், டேவிட் பெரர், ஆன்டிமுர்ரே போன்ற முன்னணி வீரர்கள் சாம்பியன் பட்டம் பெற போராடுவார்கள். நடப்பு சாம்பியனான நடால் காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. இதனால் ஜோகோவிச்சும், பெடரரும் பட்டம் வென்று விட வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை புரிந்த பெடரர் 18-வது பட்டத்துக்காக காத்திருக்கிறார். அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார். ஜோகோவிச் 2-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளார். அவர் 7 கிராண்ட்சிலாம் வென்றுள்ளார்.

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் இந்த முறையும் ஆதிக்கம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 17 கிராண்ட்சிலாம் பட்டத்தை கைப்பற்றி அவர் இன்னும் ஒரு பட்டம் வென்றால் நவரத்தி லோவாலின் 18 கிராண்ட்சிலாம் வென்ற சாதனையை சமன் செய்வார். செரீனா அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை வென்றுள்ளார்.

ஷரபோவா, குவிட்டோவா, ஷிமோனா ஹெல்ப், கெர்பர், ரட்வன்ஸ்கா, பவுச்சர்ட், இவானோவிக் போன்ற முன்னணி வீராங்கனைகளும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்