முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நால்வருக்கு மரண தண்டனை: ஹமாஸ் நிறைவேற்றியது

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

காஸா, ஆக 26 - இஸ்ரேலுக்கு உளவு பார்த்த குற்றத்துக்காக காஸாவில் 4 பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இத்துடன் ஹமாஸின் மரண தண்டனை மூலம் உயிரிழந்த பாலஸ்தீனர்கள் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

காஸாவின் ஜபாலியா பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் அமைந்துள்ள மசூதியின் முற்றத்தில் அந்த நான்கு பேர் சுட்டு கொல்லப்பட்டனர். ஹமாஸ் ஆதரவில் செயல்படும் அல் மஜீத் என்கிற வலைதளத்தில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள விவரத்தில் சட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்ட  பின்பு நால்வருக்கும் புரட்சிகரமான முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிரிகளுக்கு உதவி புரியும் எவருக்கும் இது போல மரண தண்டனை விதிக்கப்படும் என்று அந்த வலை தளத்தில் மேலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இஸ்ரேல் உளவாளிகள் என கூறப்பட்ட மூவர் கொல்லப்பட்டனர். மேலும் 18 பேர் இதே குற்றத்துக்காக கொல்லப்பட்டனர். ஆக மொத்தம் உளவாளிகள் என சுட்டு கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் யார் யார் என்பது குறித்து ஹமாஸூம் அந்த வலைதளமும் எந்த விவரமும் வெளியிடவில்லை. ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு பெரும் பின்னடைவாக அதன் மூன்று முக்கிய தளபதிகள் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து பழிக்குப் பழி வாங்கப்படும் என்று ஹமாஸ் கூறியிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago