முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

நாபா, ஆக 26 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதி இருளில் மூழ்கியது. நாபா எனுமிடத்தில் இருந்து தென்மேற்கே 6 மைல் தொலைவில் நடந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1989ம் ஆண்டு அப்பகுதியில் நேரிட்ட நிலநடுக்கத்தை அடுத்து இதுதான் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 6 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 வீடுகள் முழுவதும் எரிந்து விட்டன என்று நாபா பகுதி தீயணைப்பு தலைமை அதிகாரி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்