முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

62 வயதான இம்ரான்கான் மறுமணம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஆக 26 - பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் இம்ரான்கான். இவருக்கு 62 வயதாகிறது. தற்போது இவர் பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கி தலைவராக இருக்கிறார். இவருக்கும் இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரரின் மகள் ஜெமிமா கோல்டுஸ் மித்துக்கும் கடந்த 1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சுலைமான் குவாசிம் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2004ம் ஆண்டு இம்ரான்கானும் ஜெமிமாவும் விவாகரத்து செய்து கொண்டனர். 2 மகன்களும் தாயாருடன் இங்கிலாந்தில் உள்ளனர்.

தற்போது பாகிஸ்தானில் தனிமையில் வாழும் இம்ரான்கானை மறுமணம் செய்யும்படி அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். இவரது திருமணம் குறித்து ஊடகங்கள் பல்வேறு தகவல்களை பரப்பி வந்தன. தற்போது பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக கோரி இஸ்லாமாபாத்தில் பாராளுமன்றம் முன்பு கட்சி தொண்டர்களுடன் இம்ரான்கான் போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாராளுமன்றத்தின் முன்பு முகாமிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் மத்தியில் அவர் பேசினார். அப்போது புதிய பாகிஸ்தானை உருவாக்க வேண்டும் என்ற கனவு உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உள்ளது. உண்மையிலேயே புதிய பாகிஸ்தான் உருவாகும் போது நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்