முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி - கலாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக.30 - ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மீது டெல்லி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் பெயர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இவர்களைத் தவிர மலேசிய தொழில் அதிபர் அனந்த கிருஷ்ணன் பெயரும் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. 4 தனிநபர்கள் தவிர சன் டைரக்ட் டிவி பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட 4 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தனிநபர்கள், நிறுவனங்கள் மீது சாட்டப்பட்டுள்ளன. குற்றப்பத்திரிகை மீது செப்டம்பர் 11-ல் விசாரணை நடைபெறுகிறது.

முன்னதாக நேற்று முன்தினம், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, தன் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை தடுக்கக் கோரி, முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ இன்னும் விசாரணையை முழுமையாக முடிக்கவில்லை. விசாரணை நிறைவு பெறாத நிலையில், தன் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டத்தில் இடமில்லை என தயாநிதி மாறன் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது ஏர்செல் உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத் தலைவர் அனந்த கிருஷ்ணன் அந்நிறுவனத்தை வாங்க உதவியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 2011-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவன பங்குகளில் ரூ.650 கோடியை மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு சிபிஐ, இந்த வழக்கில் இன்று டெல்லி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்