முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லெசோதோவில் ராணுவ புரட்சி: பிரதமர் தப்பி ஓட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

மசேரு, செப்.01 - ஆப்பிரிக்கா கண்டத்தில் தென்ஆப்பிரிக்கா அருகே லெசோதோ என்ற குட்டி நாடு உள்ளது. இது கடந்த 1966ம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது.

இங்கு பிரதமர் தாமஸ் தபான் தலைமையில் ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில், அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது. எனவே, கடந்த ஜூன் மாதம் முதல் கூட்டம் நடத்தாமல் பாராளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டது.

மேலும் ராணுவ தலைமை நீதிபதி லெப்டினென்ட் ஜெனரல் கென்னடி தலாய் கமோலியை பிரதமர் தபான் பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் அங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென ராணுவ புரட்சி வெடித்தது. திடீரென நேற்று அதிகாலை வீரர்கள் தலைநகர் மசேருவில் உள்ள அரசு கட்டிடங்களை தங்கள் வசமாக்கினர். அப்போது ஆங்காங்கே தெருக்களில் துப்பாக்கி சத்தம் கேட்டது. ரேடியோ நிலையத்தை ராணுவம் கைப்பற்றியது. எனவே ரேடியோ ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. டெலிபோன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து பிரதமர் தாமஸ் தயான் லெசோதோவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பி ஓடிவிட்டார். அங்கு தான் பாதுகாப்பாக இருப்பதாகவும், உடனே திரும்பினால் கொல்லப்படுவேன். எனவே விரைவில் திரும்ப இருப்பதாகவும் கூறியுள்ளார். அதை தொடர்ந்து லெசோதோவில் ரத்தமின்றி சத்தமின்றி ராணும் ஆட்சியை பிடித்ததாக கருதப்படுகிறது. ஆனால் அதை ராணுவம் மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்