முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.அமெரிக்காவில் வறட்சியால் 28 லட்சம் பேர் பட்டினி!

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஐ.நா, செப். 1 - மத்திய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடுமை யான வறட்சியில் சுமார் 28 லட்சம் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா உணவுத் திட்ட அமைப்பு கூறியுள்ளது.

தென் அமெரிக்காவையும் இந்த வறட்சி பாதித்தா லும் வறண்ட பாதை' என்று அழைக்கப்படும் வழியில் உள்ள பகுதிகளான கவுதமாலா, வடக்கு ஹாண்டுராஸ் மற்றும் மேற்கு எல் சால்வடார் ஆகியவற்றில்தான் அதிகளவு வறட்சி ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த சோளமும், அவரையும் வறட்சியால் பாதிக்கப் பட்டன. எனவே நிகாராகுவேயின் அதிபர் டேனியல் ஓர்டேகா 40,000 டன் அவரையையும், 73,500 டன் சோளத்தையும் இறக்குமதி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

கவுதமாலாவில் பல இடங்கள் வறட்சி பாதிப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வறட்சியிலும், அப்பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த காபி பயிர்கள் அதிகம் பாதிப்படையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்