முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் தாக்குதல்: அமெரிக்காவுக்கு ரூ.3,360 கோடி செலவு!

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

பென்டகன்,செப்.1 - கடந்த ஜூன் மாதத்தின் மத்தி யில் இருந்து தற்போது வரை இராக்கில் ‘இஸ்லாமிக் ஸ்டேட்' தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வான்வெளித் தாக்குதல் உள்ளிட்ட அனைத்துத் தாக்குதல்களினால் அமெரிக்காவுக்கு 560 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார். 3,360 கோடி) செலவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ மையமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பி கூறியதாவது:-

ஆரம்பத்தில் செலவு குறைவாக இருந்தது. ஆனால் போகப் போக நிறைய செலவுகள் ஏற்பட்டுவிட்டன. ஒரு நாளைக்குச் சுமார் 7.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.45 கோடி) வீதம் செலவாகியிருக்கிறது.

ஆகஸ்ட் 8ம் தேதி முதல் வான்வெளித் தாக்குதல் நடத்தப் பட்டது. இதுவரை 110 வான்வெளித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மொசூல் அணை உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் ஐ.எஸ்.ஐ.எல். தீவிரவாதிகள் கைப்பற்ற நினைப்ப தால் அப்பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கான செலவுகள் முழுவதும் 2014ம் ஆண்டுக்கான பென்டகனின் வெளிநாட்டு தற்செயல் செலவுகளுக்கான நிதியத்தில் இருந்து வழங்கப்படு கிறது. செப்டம்பர் மாதம் வரைக்கும் இதில் இருக்கும் நிதி போதும். எனினும், ஈராக்கில் தாக்குதல் மேலும் வலுப்பெற்றால் அதன் அடிப்படையில் நாடாளு மன்றத்தில் அடுத்த பட்ஜெட்டின் போது பென்டகனுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்