முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி - பதற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 31 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.01 - பாகிஸ்தானில் பிரதமர் நவாசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் 7 பேர் பலியானதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற பொது தேர்தலின் போது ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றன. இதற்கு பொறுபேற்று பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக அவரது கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி முஸ்லிம் மத குரு தாஹிர் உல் காத்ரியின் அவாமி கட்சி ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரு கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கடந்த 14-ம் தேதி முதல் பாகிஸ்தான் நாடாளுமன்றம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் உள்பட முக்கிய பகுதிகளில் போலீசாரும் ராணுவத்தினரும் கண்டெய்னர்களை வைத்து தடுப்பு ஏற்படுத்தி பாதுகாத்து வருகின்றனர்.

இதற்கிடையே, இம்ராம்கான் மற்றும் காத்ரியுடன் அரசு தரப்பில் நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற முன்பக்க கதவை உடைத்து கொண்டும், கண்டெய்னர் தடுப்புகளை கிரேன் மூலம் அகற்றிவிட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லத்தை நோக்கி படையெடுத்தனர். இதையடுத்து, போலீசாரும் ராணுவத்தினரும் தடுத்து நிறுத்த முயன்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே நேற்று அதிகாலை மோதல் ஏற்பட்டது. கத்தி, கம்பு மற்றும் கூரிய ஆயுதங்களாலல் வன்முறை கும்பல் போலீசாரை தாக்க துவங்கியது. போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் வெடிகுண்டுகளையும் வீசினார்கள். மேலும் போராட்டகாரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 35 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் துப்பாக்கி சூட்டில் 7 பேர் பலியாயினர்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகும்வரை எங்களது போராட்டம் தொடரும். எங்களது கடைசி மூச்சு உள்ளவரை போராடுவோம் என்று பிரதமரின் இல்லத்தில் முன் கண்டெய்னரில் இருந்தபடி நிருபர்களிடம் இம்ரான்கான் கூறினார். இதனால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்