முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நவாஸ் ஷெரிப் பதவி விலக ராணுவ தளபதி உத்தரவு

திங்கட்கிழமை, 1 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

 

இஸ்லாமாபாத், செப்.02-

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட கலவரம் கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சி நிலையத்திற்குள் புகுந்து அதைக் கைப்பற்றினர். இதனால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் ராணுவம் விரைந்து வந்து தொலைக்காட்சி நிலையத்தை மீட்டதையடுத்து மீண்டும் ஒளிபரப்பு துவங்கியது.

பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்தில் தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலையும் உடைத்து உள்ளே நுழைந்ததால், அங்கும் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் விலக முடியாது என்கிறார் நவாஸ் ஷெரிப். இருப்பினும் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி அமுலுக்கு வரலாம் என தெரிகிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு எதிரான போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்ததால், போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தும் நவாஸ் ஷெரிப் எதிர்ப்பாளர்கள் தங்களது போராட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென்று போராட்டக்காரர்கள் திரண்டு தலைமை செயலகம் நோக்கி செல்ல முற்பட்டனர். ராணுவத்தினர் அவர்களை தடுக்க முயன்றபோது அவர்களை மீறி தலைமை செயலகத்தின் நுழைவு வாயிலை உடைத்து போராட்டாகாரர்கள் உள்ளே நுழைந்தனர்.

போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த ராணுவ அதிகாரிகள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவர்கள் உள்ளே நுழையாமல் தடுக்க, செயலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் மூடியுள்ளனர்.

இதை தவிர, பாகிஸ்தான் அரசு செய்தி தொலைக்காட்சியான பாகிஸ்தான் டிவி வளாகத்தினுள் நுழைந்த 800- க்கும் மேற்பட்ட நவாஸ் எதிர்ப்பாளர்கள் அங்கிருந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களை உடைத்ததாக தெரிய வந்துள்ளது. மேலும் கட்டுப்பாட்டு அறையை முற்றிலுமாக அவர்கள் சேதப்படுத்தியதால் ஒளிபரப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

பின்னர் அங்கு விரைந்த ராணுவத்தினர், தொலைக்காட்சி நிறுவன வளாகத்திற்கு பாதுகாப்பு அளித்து அங்கிருந்த போராட்டக்காரர்களை வெளியேற்றினர். இதனை அடுத்து ராணுவ பாதுகாப்புடன், தொலைக்காட்சி நிறுவனம் இயங்க தொடங்கியது.

ஆனால், இதனை இம்ரான் கான் மறுத்துள்ளார். தங்களது ஆதரவாளர்களுக்கு பி- டிவியை தாக்க கட்டளையிடவில்லை என்றும், அங்கு கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டதால் இஸ்லாமாபாதில் பதற்றம் தொடர்கிறது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி, பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தான் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14- ஆம் தேதி முதல் தலைநகர் இஸ்லாமாபாத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை போராட்டம் முற்றிய நிலையில், போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடச் சென்றதால், அவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலில் 8பேர் உயிரிழந்தனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நூற்றுக்கணக்கான போலீஸார் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்று ராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால் பதவி விலக முடியாது என்கிறார் நவாஸ் ஷெரிப். அதே நேரம் ஷெரிப் பதவி விலகுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று அடித்துக் கூறுகிறார் இம்ரான் கான். எது எப்படியோ பாகிஸ்தானில் வெகுவிரைவில் ராணுவ ஆட்சி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago