முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல் கேபிள் விவகாரம்: மத்திய அரசு ஐகோர்ட்டில் அறிக்கை

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

சென்னை, செப்.3 - மாறன் சகோதரர்களின் கல் கேபிள் நிறுவனம் எம்.எஸ்.ஓ. நடத்துவதற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கவது என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிகக்கூடியதாகும் என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தார்.
இந்த நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மறுத்தது ஏன்? என்பதற்கான காரணங்கள் அடங்கிய ரகசிய அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தீர்ப்பை தள்ளி வைத்துள்ளார்.
கல் கேபிள் நிறுவனத்தின் எம்.எஸ்.ஓ. உரிமத்தை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் கடந்த மாதம் 20_ம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது. அந்த உத்தரவில் இந்த நிறுவனத்திற்கு பாதுகாப்பு சான்றிதழ் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. எனவே, கல் கேபிள் நிறுவனம் தனது தேவையை 15 நாள்களுக்குள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இது தொடர்பான அறிவிப்பை தனது வாடிக்கையாளர்களுக்கு தொலைகாட்சி மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து கல் கேபிள் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது இந்த வழக்கு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு வக்கீல் ஜி.ராஜகோபாலன், என்.ராமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். கல் கேபிள் நிறுவனம் சார்பில் மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது மத்திய அரசு வக்கீல் ஜி.ராஜகோபாலன், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ரகசிய அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்து வாதிட்டார். கடந்த 206_ம் ஆண்டு முதல் 2013_ம் ஆண்டு வரை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு சான்றிதழ் கேட்டு கல் கேபிள் நிறுவனம் கொடுத்து விண்ணப்பம் நிலுவையில் இருந்து வந்துள்ளது. அதன்மீது 2013_ம் ஆண்டு  வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது ஏன் என்பது குறித்தும் தெரியவில்லை. இது பற்றி மத்திய அரசு தனியாக விசாரித்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு எதிராக எதிர்மறை கருத்துக்கள் வந்ததை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் சான்றிதழ் தர மறுத்துள்ளது. இதற்கு சான்றிதழ் கொடுப்பது என்பது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய செயலாகிவிடும்.
நாட்டு நலன், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாதுகாப்பு சான்றிதழ் தர மறுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிறுவனம் எப்படி உரிமம் பெற்று இதுநாள் வரை கேபிள் டி.வி. சேவையை நடத்தி வந்தது என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பெற்றுள்ள ஒரு நிறுவனம் இந்தியாவில் பதிவு செய்து விட்டு வெளிநாடுகளில் பண பரிமாற்றம் செய்துள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து கல் கேபிள் நிறுவனம் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சான்றிதழ் தர மறுப்பது ஏற்புடையது அல்ல என்றனர். இந்த நிறுவனம் ஒரு தொலைக்காட்சி ஒளிப்பரப்பு சிக்னல்கள் பெற்று வீட்டுகளுக்கு  அனுப்புவது மட்டுமே செய்வதாகும். தனியாக சேனல்களை நடத்தவில்லை என்றனர். மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் சேனல் சிக்னல்களை பெற்று தரவில்லை என்றும் கூறினர்.
இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக வழங்குவதாக நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தீர்ப்பை தள்ளி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago