கண்ணி வெடி தாக்குதலில் 4 ஐ.நா. வீரர்கள் பலி

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2014      உலகம்
UN-logo 0

 

பமாகோ, செப்.04 - வடக்கு மாலியில் தீவிரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 4 ஐ.நா. பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகினார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான வடக்கு மாலி சுதந்திர நாடாகும். இங்கு ஷரியத் பிரிவை சேர்ந்த தவுரக் என்ற பழங்குடி முஸ்லிம்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்கள் கிடால், கவோ, திம்புக்டு மற்றும் டவுன்ட்சா ஆகிய நகரங்களில் வசிக்கின்றனர். பழங்குடி முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளை ஒருங்கிணைத்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அசாவாத் தேசிய மக்கள் படையின் கீழ் ஏராமான தீவிர வாத குழுவினர் போராடி வருகின்றனர். அவர்கள் வடக்கு மாலியின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கலை நடத்தி வருகின்றனர். இத்தாக்குதலில் ஏராளமான மக்கள் பலியாகி உள்ளனர். அங்கு கலவரங்களை அடக்குவதற்கும், தீவிரவாதிகளின் செயல்பாடுகளை முடக்குவதற்கும் பிரெஞ்சு படைகளின் தலைமையின் கீழ் ஐநா அமைதி படையினர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலைியல், ஐநா அமைதிபடையினர் நேற்று முன்தினம் காலை கிடால் நகரில் இருந்து அகுல்ஹோக் நகருக்கு செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலைகளில் தீவிரவாத குழுவினர் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் ஐநா வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இந்த கண்ணி வெடி தாக்குதலில், ரோந்து வாகனத்தில் இருந்த 4 ஐநா வீரர்கள் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 15 ஐநா வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது என்று ஐநா அமைதி படையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: