முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் ஓரு அமெரிக்க பத்திரிகையாளரின் தலை துண்டிப்பு

புதன்கிழமை, 3 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.04 - அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள் அமெரிக்காவுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை துண்டித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை. .

31 வயதான ஸ்டீவன் சாட்லாஃப் கடந்த 2012-ம் ஆண்டு சிரியாவின் ஆலெப்போ நகரில் இருந்து கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில், ஸ்டீவன் சாட்லாஃப் தலை துண்டிப்பு வீடியோ பதிவுகளை ஐ.எஸ். வெளியிட்டுள்ள நிலையில், அதன் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்த புலனாய்வு அதிகாரிகள், வீடியோ நம்பகமானதே என தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கேத்தலீன் ஹேடன் கூறுகையில்: "அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட விரிவான ஆய்வின் அடிப்படையில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஸ்டீவன் சாட்லாஃப் தலையை துண்டிக்கும் வீடியோ நம்பகமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப்படை அனுப்பியுள்ள அந்த வீடியோவுக்கு தகவல் பெயரிடப்பட்டுள்ளது. இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டை கண்டிக்கும் வகையில் ஸ்டீவன் சாட்லாஃப் தலை துண்டிக்கப்படுவதாக கூறுப்பட்டுள்ளது. 'இவரது தலை, இராக் பிரச்சினையில் அமெரிக்க தலையீட்டிற்கான விலை' என்கிறது கிளர்ச்சியாளரின் அந்தப் பேச்சு.

தங்கள் பிடியில் இருக்கும் டேவிட் ஹெய்ன்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த பிணைக் கைதியை கொலை செய்யப்போவதாக கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் அன்றாட செய்திகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அந்த செய்தி வெளியானது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி செயலர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியதாவது: "ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலை அமெரிக்க நிர்வாகம் கடந்த சில நாட்களாகவே கூர்ந்து கவனித்து வருகிறது. ஸ்டீவன் சாட்லாஃப் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது சில வாரங்களுக்கு முன்னரே உறுதியானது. இந்தச் சூழலில் அவரது குடும்பத்திற்கும் அவருடன் பணியாற்றியவர்களுக்கும் அரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்