இந்தியாவில்தான் தற்கொலை சம்பவங்கள் அதிகமாம்!

வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.6 - உலகிலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கு ஒரு முறை ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். உலகிலேயே தென் கிழக்கு ஆசிய நாடுகளில்தான் தற்கொலை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இளைஞர்களும், முதியவர்களும் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. உலகில் நடைபெறும் தற்கொலை சம்பவங்களில் 39 சதவீதம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறுகிறது. கடந்த 2012ம் ஆண்டு ஆய்வின்படி, இந்தியாவில்தான் தற்கொலைகல் அதிகமாக உள்ளது. 2012ல் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58,075 பேர். இதில் 99,977 பேர் பெண்கள். 1லட்சத்து 58,098 பேர் ஆண்கள். உலக அளவில் சுமார் 21.1 சதவீதம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சதவீத அடிப்படையில் தற்கொலையால் பாதிக்கப்படும் நாடுகளில் 44.2 சதவீதத்துடன் கயானா முதல் இடத்திலும், வட,தென்கொரியா ஆகியவை முறையே 38,5, 28.9 சதவீதம் என்ற அளவில் அடுத்த இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக இலங்கை 28.8, லிதுவேனியா 28.2, சுரினாம் 27.8, மொசாம்பிக் 27.4, நேபாளம், தான்சானியா தலா 24.9, புருண்டி 23.1, இந்தியா 21.1, தெற்கு சூடான் 19.8 என்ற அளவில் உள்ளது. தற்கொலை சம்பவங்களில் 75 சதவீதம் மிகவும் வருவாய் குறைந்த நாடுகளிலேயே நடப்பதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: