மோடியை சந்திக்க இலங்கை மாகாண முதல்வருக்கு நிபந்தனை

சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு,செப்.7 - இலங்கையில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சில் முதல்வர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு, தன்னிடம் அனுமதி பெற வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இலங்கை செய்தித் துறை அமைச்சர் கெஹிலிய ரம்புக்வெல்லா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறும்போது, "வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் மாநில ஆளுநரிடம் (அதிபரால் தேர்ந்தெடுக்கப்படுபவர்) முன் அனுமதி பெற வேண்டும்" என்றார்.

இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் (டிஎன்ஏ) தலைவர்கள் கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அப்போது, மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அவர்கள் சந்தித்துப் பேசினர். இந்நிலையில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் மோடியை சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: