ஒரு முத்தத்தின் விலை ரூ.49 லட்சம்!

ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கனடா, செப்.08 - அன்பு மிகுதியால் பிரதிபலன் பாராமல் ஒருவர் இன்னொரு வருக்குத் தருவதுதான் முத்தம். ஆனால் விலைக்கு வாங்கிய முத்தம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கனடாவில் உள்ள வின்ட்சார் எனும் நகரத்தில் முத்தத்துக்கு விலை வைக்கப்பட்டது.

இங்கிலாந்தின் பிரபல நடிகை யான எலிசபெத் ஹர்லி (49), 'எல்டன் ஜான் எய்ட்ஸ் அறக்கட்டளை' சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக மக்களிட மிருந்து நிதியுதவி பெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவரை முத்தமிட விரும்பினார் இந்திய வம்சாவளி கனடியரான‌ ஜூலியன் பாரதி. அதற் காக‌ 50,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (சுமார் ரூ. 49 லட்சம்) வழங்கி யிருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் பெற்றுக்கொண்ட அந்த நடிகையும் ஜூலியனுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார்.

கனடாவின் பிரபல தொழிலதிபர் ஸ்டான் பாரதியின் மகனான இவர் தனியார் வங்கி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகளும் இருக்கின்றன. இந்த முத்தச் சம்பவம் குறித்து தனது மனைவி கிறிஸ்டி எதுவும் தவறாக நினைக்கவில்லை என்று சந்தோஷத்தில் துள்ளுகிறார் ஜூலியன் பாரதி.

இதை ஷேர் செய்திடுங்கள்: