முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.10 - பாகிஸ்தானில் பிரதமர் ஷெரீபை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இம்ரான்கான் மற்றும் மதகுரு தாஹிர் அல் காத்ரி ஆகியோர் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்கிறது. அதேநேரத்தில் அரசுக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் நாடாளுமன்ற வளாகத்தில் முகாமிட்டுள்ள தனது ஆதரவாளர்களிடம் பேசும்போது, மேலும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முற்றுகையை நீட்டிக்க வேண்டும் எனவும், மேலும் கூடுதலாக மக்களை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும்" எனவும் கூறினார். பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் கட்சித் தலைவர் தாஹிர் அல் காத்ரியும் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ள பகுதிக்கு அருகிலேயே தனது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ளார்.

அரசுக்கும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் மற்றொரு சுற்று தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிடிஐ கட்சியின் துணைத் தலைவர் ஷா மெஹ்மூத் குரேஸி கூறும்போது, "அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலிலிருந்து நாட்டை மீட்டெடுக்க இருதரப்பிலும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago