முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலா பாதிப்பை சமாளிக்க உலக நாடுகளுக்கு ஐ.நா. அழைப்பு

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.10 - எபோலா நோய் தாக்குதல் அபாயகரமான அளவில் உள்ள நிலையில், அனைத்து நாடுகளும் தன்னார்வு அமைப்புகளும் உதவிகளை அளிக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், பிரான்ஸ் பிரதமர் பிரான்சிஸ் ஹாலாண்டே, கியூபா அதிபர் ரவுல் கேஸ்ட்ரோ, ஐரோப்பிய கவுன்சில் அதிபர் ஹேர்மன் வான் ராம்பூ ஆகியோரை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கையில் மருத்துவ குழுக்களை அனுப்புவது, நிதி உதவி, போக்குவரத்து வசதி, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு வசதி என அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவிகளை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக சினுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி, கினியா, லைபீரியா, செனகல், சியேரா லியோனில் எபோலா நோய்க்கு இதுவரை 2,079 பேர் பலியானதாகவும், 3,944 பேருக்கு நோய் தாக்கு இருப்பதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் நோய் பரவுவதற்கான சாத்தியங்கள் மிகவும் எளிதாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், லைபீரியாவின் நிலைமை அனைத்து நாடுகளை விடவும் மோசமாக உள்ளதாகவும், இங்கு வரும் வாரங்களில் புதிதாக 1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு எபோலா தாக்க சாத்தியங்கள் அதிக அளவில் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago